மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்?

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 03:20 pm
central-govt-removes-17-languages-including-tamil-for-ctet-exam

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

சி.டி.இ.டி எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(Central Teachers Eligibility Test) இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 19ம் தேதி கடைசிநாளாகும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவர். இரண்டு தாள்கள் இருக்கும் இந்த தேர்வில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்ற தாள் 1- லும், 5 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்ற தாள் 1 மட்டும் தாள் 2 லும் தகுதி பெற வேண்டும். 

இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட இதன் அறிவிக்கையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக 20 மொழிகளில் எழுதப்படும் இந்த தேர்வு தற்போது 17 மொழிகள் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த மூன்று மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வு முதல் அமலுக்கு வருகிறது. இந்த செய்தி தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மொழிகள் நீக்கம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close