தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை சேர்க்கும்படி சிபிஎஸ்இ-க்கு அமைச்சர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 03:42 pm

minister-prakash-javadekar-ordered-cbse-for-allowing-17-languages-for-ctet-exam

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் நீக்கப்பட்டதாக கூறிய தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை சேர்க்கும்படி சிபிஎஸ்இ-க்கு  மத்திய அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சி.டி.இ.டி எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(Central Teachers Eligibility Test) அறிவிக்கை சமீபத்தில் வெளியானது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இந்த தேர்வு வருகிற செப்டம்பர் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 19ம் தேதி கடைசிநாளாகும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவர். 

முன்னதாக 20 மொழிகளில் எழுதப்படும் இந்த தேர்வு தற்போது 17 மொழிகள் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட  தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை சேர்க்கும்படி சிபிஎஸ்இ-க்கு  அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் வழக்கம்போல் 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என உறுதியாகியுள்ளது 

இதுதொடர்பாக, சிபிஎஸ்இ தரப்பில், "சி.டி.இ.டி தேர்வு நடத்துவது தொடர்பான ஒரு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் 4 மாதத்திற்குள் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதலில் 3 மொழிகளில் தேர்வு நடத்திவிட்டு இரண்டாம் கட்டமாக மற்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே சிபிஎஸ்இ அவ்வாறு தேர்வு விதிமுறைகளை வெளியிட்டிருந்தது" என விளக்கமளித்துள்ளார். 

Advertisement:
[X] Close