தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் இல்லை- தேவகவுடா

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Jun, 2018 10:02 pm

there-is-no-problem-of-water-supply-to-tamil-nadu-says-deve-gowda

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவிற்கு எந்த சிக்கலும் இல்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே கனிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கரகம்மா கோவில் கும்பாகிஷேக விழாவில் கலந்துகொண்ட தேவகவுடா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படி  தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது. எங்களிடம் 4 அணைகள் உள்ளன. 10 நாட்களுக்கு ஒரு முறை இந்த அணைகளின் நீர்மட்டம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை ஆணையத்திற்கு உள்ளது. நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து அவர்கள் என்ன மாதிரியான பயிர்கள் நடவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குவார்கள், அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்து நடவு செய்ய வேண்டும். இரு மாநில விவசாயிகளும் விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close