வெடித்தது குழந்தை கையில் இருந்த பொம்மை துப்பாக்கி! நடந்தது என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Jun, 2018 06:21 am

bengal-girl-mistakes-pistol-for-toy-shoots-mother-times-of-india

விளையாட்டு வினையாகும் என்ற பழமொழி உண்மையாகியுள்ளது. குழந்தையின் கையில் இருந்த பொம்மை துப்பாக்கி திடிரென வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானக்கோல் என்ற கிராமத்தில் வசிந்துவந்த காகோலி ஜனா என்பவர், நேற்று கால வீட்டுத்தோட்டத்தில் துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்துள்ளார். விளையாட்டுத் துப்பாக்கி தானே என்று நினைத்து வீட்டிற்குள் எடுத்துவந்த அவர், தனது மகளிடம் விளையாட கொடுத்துள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, விளையாட்டாக துப்பாக்கியை சுட்டுள்ளார். உடனே துப்பாக்கி வெடித்து அதில் உள்ள தோட்டாக்கள் எதிரில் நின்றுக் கொண்டிருந்த காகோலி மீது பாய்ந்தது. இதனால் காகோலியின் தோள்பட்டை, மார்பு பகுதியில் கடும் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் அருகில் இருந்தவர்கள் காகோலியாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைக்கண்ட சிறுமி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில்  சேர்க்கபட்டுள்ள காகோலி உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதையடுத்து பயத்தில் உறைந்துள்ளதால் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியை குண்டுகளுடன் இவ்வளவு அஜக்கிரதயாக தோட்டத்தில் விட்டு சென்றவர்கள் யார்? என்பது பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close