கவுரி லங்கேஷ் கொலை: நாய் இறந்ததற்கெல்லாம் பிரதமர் கருத்துக் சொல்ல வேண்டுமா? - ராம்சேனா தலைவர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Jun, 2018 09:54 pm

muthalik-s-dog-remark-on-gauri-lankesh-murder-case-triggers-row

கர்நாடகாவில் ஒரு நாய் இறந்தால் பிரதமர் எதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 8 மணியளவில் அவரது குடியிருப்பு பகுதியில் மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவரை நோக்கி வந்த ஏழு தோட்டாக்களில் மூன்று அவரது கழுத்திலும், மார்பிலும் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகை நடத்தி வந்த கவுரி பாஜகவினரின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தவர். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவை சேர்ந்த பிரபல கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. மோடியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கொலைகள் குறித்து யாரும் கேள்வி கேட்பது கிடையாது. ஆனால் கவுரி லங்கேஷ் கொலைக்கு மட்டும் பிரதமர் மோடி ஏன் கருத்துக்கூற வேண்டும்? கர்நாடகாவில் ஒரு நாய் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எல்லாம் பிரதமர் கருத்துக்கூற முடியுமா? என கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதுதொடர்பாக பிரமோத் முத்தாலிக் கூறுகையில், கர்நாடாஜாவில் நடக்கும் ஒவ்வொரு சாவுக்கும் பிரதமர் கருத்துக்கூற முடியாது என்று தான் கூறினேன். நாய் என்று கவுரி லங்கேஷை கூறவில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியிடம் கேட்டபோது, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close