அசாம் ஏடிஎம்-ல் ரூ. 12 லட்ச மதிப்பிலான நோட்டுகள் எலி கடித்து நாசம்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:10 pm
mice-chews-cash-worth-rs-12-lakh-from-assam-s-atm

அசாமில் ஏ.டி.எம் மெஷினுக்குள் புகுந்த எலி, ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து நாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை.  மே 19-ஆம் தேதி 29 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை தனியார் ஏடிஎம்-ல் தனியார் பாதுகாப்பு நிறுவனம் நிரப்பியுள்ளது.  மே 20-ஆம் தேதி முதல் வேலை செய்யவில்லை என்ற புகாரை அடுத்து, ஜூன் 11-ஆம் தேதி வேலை ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். ஏ.டி.எம்-ஐ திறந்து பார்த்த ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

ஏ.டி.எம்-க்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து நாசம் செய்திருந்தது. 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டின்சுகியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close