மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பப்பதிவு நிறுத்தி வைப்பு!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:03 pm
online-application-for-the-ctet-exam-delays-to-open-due-to-administrative-reasons-cbse

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(Central Teachers Eligibility Test) அறிவிக்கை சமீபத்தில் வெளியானது. முன்னதாக 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வில் 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட  தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை சேர்க்கும்படி சிபிஎஸ்இ-க்கு மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டார். இதனால் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இந்த தேர்வு வருகிற செப்டம்பர் 19ம் தேதி நடைபெற இருந்தது. அதேபோல் இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவங்கள் வருகிற 22ம் தேதி முதல் தொடங்கப்பட இருந்தன. தற்போது 17 மொழிகளை சேர்ப்பதால் ஆன்லைன் விண்ணப்பிப்பதிவு தற்காலிகமாக  நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 22ம் தேதி ஆன்லைன் விண்ணப்பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close