விவசாயிகளுடன் கலந்துரையாடல்: ட்விட்டரில் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 01:09 pm

pm-modi-invites-all-to-join-an-interaction-with-our-farmers

நாளை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாட இருக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கும் பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக இலவச சமையல் எரிவாயு இணைப்பு பயனாளிகளிடம்  பேசினார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பயன்பெற்ற மக்களிடம் கலந்துரையாடினார். தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள விவசாயிகளிடையே கலந்துரையாட இருக்கிறார் பிரதமர் மோடி. நாளை காலை 9.30 மணி முதல் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுடன் பேசும் அவர், அவர்களின் பிரச்னைகளை கேட்டறிகிறார். வேளாண் வளர்ச்சி குறித்தும் விவாதிக்க இருக்கிறார். கிராமங்களில் உள்ள சுமார் 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் இந்த கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. 

மேலும், விவசாயிகளுடனான இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் கடும் உழைப்பாளிகளான விவசாயிகள் தான் நாட்டின் பெருமை. நாளை காலை 9.30 மணிக்கு விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். இதனை நமோ ஆப் அல்லது டிடிநியூஸ் லைவில் பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close