பி.டி.பியுடன் கூட்டணியில்லை: குலாம் நபி ஆசாத் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 05:13 pm
no-question-of-alliance-with-pdp-congress

காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க கூட்டணி முறிந்ததையடுத்து, பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெஹபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார். இதனால் காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. தொடர்ந்து புதிய அணி உருவாகும் என கருதப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் நிலை குறித்து பேசுகையில், "காஷ்மீரில் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க கூட்டணி கூட்டணி முறிவை மகிழ்ச்சியாக காங்கிரஸ் வரவேற்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு காஷ்மீரை  சீரழித்துவிட்டு பா.ஜ.க வெளியேறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் எல்லையில் தீவிரவாதம், வன்முறையால் ஏராளமான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான பா.ஜ.கவே கூட்டணியை முறித்துக்கொண்டது வியப்பளிக்கிறது. ம.ஜ.க - பா.ஜ.க கூட்டணியில் காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது. எனவே ம.ஜ.க உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று காஷ்மீரில் 15 தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, "பிடிபியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை. எங்களுக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. எனவே காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி தான் சரியானது" என கூறியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையால் காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி தான்அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close