ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 08:11 am
president-ram-nath-kovind-has-approved-imposition-of-governor-s-rule-in-j-k

குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன. 

கடந்த சில மாதங்களாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என்.வோராவிடம் அளித்தார்.

மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழல் நிலவியது. இதனையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கு குடியரசு ராம்நாம் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இதனால் 8வது முறையாக ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. முதன் முறையாக மார்ச் 26, 1977 அன்று அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close