'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 09:34 am

tamil-nadu-girl-crowned-femina-miss-india-2018

மிஸ் இந்தியா போட்டியில் சென்னையை சேர்ந்த அனுகிரீத்தி வாஸ் மகுடம் சூடினார்.

மும்பையில் மிஸ் இந்தியா போட்டியின் கடைசி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இதில் தமிழகத்தை சேர்ந்த  அனுகிரீத்தி வாஸ் தேர்வானார். 19 வயதாகும் அனுகீர்த்திக்கு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து  அனுகிரீத்தி உலக அழகி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சௌத்ரியும் 3வது இடத்தை ஆந்திராவின் ஸ்ரேயா ராவ்வும் பிடித்துள்ளனர். 

இந்த போட்ட்டியில் நடுவர்களாக கிரிக்கெட் வீரர்கேள் இர்ஃபான் கான், கே.எல்.ராகுல், நடிகர்கள் மலைக்கா அரோரா, பாபி டியோல் மற்றும் குனால் கபூர் ஆகியோர் இருந்தனர். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close