மத்திய அரசு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 03:08 pm
chief-economic-adviser-arvind-subramanian-resigns-his-job

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

அரவிந்த் சுப்பிரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பதவியேற்றார்.  2017ல் அவரது 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அவரது திறமையை கருத்தில் கொண்டு, பணியைத் தொடருமாறு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அரவிந்த் சுப்ரமணியனிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தற்போது வரை பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.  இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, "பொருளாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர் அரவிந்த் சுப்ரமணியன். அவர் அமெரிக்கா சென்றாலும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துகொள்வார்" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close