ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினருக்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 05:19 pm
defence-minister-nirmala-sitharaman-meets-family-of-army-jawan-aurangzeb-killed-in-kashmir

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்திக் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றியவர் அவுரங்கசீப்.  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சமீரை சுட்டுக் கொன்ற ராணுவப்படை குழுவில் இவரும் இருந்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் சோபியானில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.  இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு  அவுரங்கசீப்பின் உடல் கிடைத்துள்ளது. பின்னர் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவுரங்கசீப் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அவுரங்கசீப் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தேன். உண்மையிலே நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்கள் இந்திய நாட்டிற்கே முன்னுதாரமாக  திகழ்கின்றனர்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close