காங்கிரஸ்காரரின் வாழ்வை மாற்றிய மோடியின் பகோடா அட்வைஸ்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Jun, 2018 06:23 pm
pm-modi-s-pakoda-selling-advice-changed-life-of-congress-worker-in

பகோடா விற்கும்படி பிரதமர் கூறியதை இனி காங்கிரஸ் கிண்டல் செய்ய முடியாது. உண்மையில், பிரதமர் மோடியின் பகோடா அட்வைஸை கேட்டு பகோடா கடை ஆரம்பித்த வேலையில்லாமல் இருந்த நபர் ஒருவர்... இன்றைக்கு 35 கடைகளுக்கு உரிமையாளராக மாறியிருக்கிறார்.

5 ஆண்டுகளுக்கு முன் ஆக்ராவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, இந்தியாவில் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். சிலரோ படிப்புக்கு தகுந்த வேலையில்லாமல் ஏதோ ஒரு வேலைக்கு செல்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். 

பிரதமர் மோடியின் 3 ஆண்டுகள் ஆட்சி காலம் நிறைவடைந்த தருணத்தில், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பாஜக மேற்கொண்ட நடவடிக்கை பற்றி கேள்விக்கு எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,  “தினமும் ஒருவர் பக்கோடா விற்று, வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா? பகோடா விற்பது கூட ஒரு வேலை தான்” என கூறினார். மோடியின் இந்த பதிலுக்கு  இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மத்தியிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் பிரதமரின் பகோடா விற்பது கூட ஒரு தொழில்தான் என்ற அறிவுரையை கேட்டு குஜராத் மாநிலம் வதோதாராவைச் ஏர்ந்த ராஜ்புத் என்பவர் ஒரு சிறிய பகோடா கடையை திறந்துள்ளார். கடுமையாக உழைத்த அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்துள்ளது. இதனையடுத்து பல இடங்களில் பகோடா கடை திறக்க முடிவெடுத்து பல பகோடா கடைகளை திறந்தார். இதனால் சிறிய கடைக்கு உரிமையாளராக இருந்த ராஜ்புத், மிகப்பெரிய தொழிலதிபராகி உள்ளார்.  

இது குறித்து ராஜ்புத் கூறுகையில், “மற்ற தொழில்களைவிட பகோடா கடையினால் நல்ல லாபம் கிடைக்கிறது. 10 கிலோ மாவுடன் எனது கடையை தொடங்கினேன். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 600 கிலோ அளவிலான மாவு என் கடைகளுக்கு தேவைப்படுகிறது. நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்த ஜென்மத்திலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். இருப்பினும் மோடியின் அறிவுறையை கேட்டதால் இன்று வாழ்கையில் உயர்ந்துள்ளேன்” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close