காஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலி

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 10:58 pm
kashmir-policeman-killed-2-others-injured-in-terrorist-attack

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீர் காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் நடைபெற்று வரும் தொடர் தீவிரவாத தாக்குதல்களால், அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி தீவிரவாதிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, கூட்டணியான பாரதிய ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றது. அதன் பின், ஆளுநரின் ஆட்சியில் உள்ளது காஷ்மீர். இந்நிலையில், புல்வாமாவின் கண்டிசால் பகுதியில் காவல்துறையினரின் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் 3 பேர் காயமடைந்தனர். அருகே உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க, போலீசார் புல்வாமாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close