ரூ.2043 கோடி ரூபாய் கடன் மோசடி; பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைவர் கைது!

  Newstm News Desk   | Last Modified : 21 Jun, 2018 06:13 am

bank-of-maharashtra-chairman-arrested-after-rs-2043-crore-loan-fraud

சுமார் 2043 கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரத்தில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் உள்ளிட்ட 6 பேரை, பொருளாதார குற்றவியல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

புனேவை சேர்ந்த டிஎஸ்கே நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா வங்கி முறைகேடாக கடனளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொருளாதார குற்றவியல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அந்த நிறுவனத்துக்கு லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் 2043 கோடி ரூபாய் அளவுக்கு புனே மகாராஷ்டிரா வங்கி முறைகேடாக கடனளித்தது தெரிய வந்தது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவீந்திர மராத்தே, அதிகாரிகள் ராஜேந்திர குப்தா, நித்யானந்த் தேஷ்பாண்டே, முன்னாள் தலைவர் சுஷில் முஹ்நோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல டிஎஸ்கே நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் கணக்காளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 6 பேரும், புனே நீதிமனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் இந்த மாதம் 27ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close