நமது சுகாதாரத்தின் பாஸ்போர்ட் யோகா: மோடி  

  சுஜாதா   | Last Modified : 21 Jun, 2018 05:26 am

modi-tweet-about-yoga

நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவின்படி, கடந்த  2014-ம் ஆண்டு  ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று  ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று 4வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது 'ட்விட்டர்'  பக்கத்தில் கூறியிருப்பதாவது: "யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   

Advertisement:
[X] Close