'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென் 

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 11:22 am

he-is-ram-for-me-modi-s-wife-about-anandi-ben-speech

மோடிக்கு திருமணமாகவில்லை என ம.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்தது குறித்து மோடியின் மனைவி ஜசோதாபென் கருத்துக் கூறியிருக்கிறார். 

பிரபல நாளிதழ் ஒன்றில் மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்திபென் கடந்த 19ந்தேதி "பிரதமர் மோடிக்கு திருணமாகவில்லை" என்று கூறியிருந்நதது வெளியாகி இருந்தது. பிரதமருக்கு மனைவியிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு பேசி இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தது. 
இந்நிலையில் இதுகுறித்து மோடியின் மனைவி ஜசோதாபென் கருத்து தெரிவித்து உள்ளார். 

அதில், "ஆனந்திபென் பத்திரிகைக்கு இவ்வாறு கருத்து கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 2004 நடந்த தேர்தலில் தனக்கு திருமணமாகிவிட்டதையும், என் பெயரை மனைவி என்றும் மோடி தெரிவித்து இருந்தார். 

படித்த ஆனந்திபென் இவ்வாறு கூறுவது சரியல்ல. தன் குருவைப் பற்றி அவர் இவ்வாறு கூறுதல் கூடாது. இது மட்டுமல்ல அவரது செயல்கள் பிரதமரின் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது. எனக்கு அவர்  மீது அதிக மதிப்பு உண்டு, அவர் எனக்கு ராமர்" என்று கூறியிருக்கிறார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close