டெல்லியில் கார் நிறுத்துவதில் தகராறு: துப்பாக்கியால் ஓட்டுனரை சுட்ட பெண் கைது

  Padmapriya   | Last Modified : 21 Jun, 2018 02:03 pm

woman-fires-at-auto-driver-after-tiff-arrested

டெல்லியில் கார் நிறுத்தும் தகராறில் ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

டெல்லி குர்கானைச் சேர்ந்தவர்  சப்னா மற்றும் அவரது கணவர் புரே ஆகியோர், தங்கள் காரை நிறுத்துமிடத்தில் ஆட்டோவை நிறுத்தியதற்காக அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரை சப்னா கணவர் அத்திரத்தோடு கன்னத்தில் அறைந்திருக்கிறார். 

தகராறு  முற்றி போக திடீரென அந்தப் பெண்  வீட்டிற்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து  ஆட்டோ ஓட்டுனரின் நெற்றிப்பொட்டின் மீது வைத்து சுட்டார். சற்று சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் தலையை சாய்த்ததால், தோட்டா அவருடைய காதை உரசிச் சென்றது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து  கணவன் மனைவி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து போலீசாரிடம் வழங்கியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close