மதம் மாற வற்புறுத்திய பாஸ்போர்ட் அதிகாரி: இந்து - முஸ்லிம் தம்பதி புகார் மீது சுஷ்மா நடவடிக்கை

  Padmapriya   | Last Modified : 21 Jun, 2018 03:11 pm
harassed-at-mea-s-lucknow-office-hindu-muslim-couple-finally-gets-passport

உத்தரப் பிரதேச பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி தங்களை மதம் மாற வற்புறுத்தி விண்ணப்பத்தை நிராகரித்ததாக இந்து முஸ்லிம் தம்பதியினர் புகார் கூறியுள்ளனர். இதன் மீது வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முகமது சித்திக்,  மற்றும் தான்வி சேத் ஆகிய இருவரும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். லக்னோ பாஸ்போர்ட் கிளை அலுவலகத்துக்கு இருவரும் நேர்காணலுக்காக அழைக்கப்பட்ட நிலையில், அவர்களை நேர்காணல் செய்த அதிகாரி மிஸ்ரா என்பவர், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் பெயரையும், மதத்தையும் மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது

அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்று நேர்காணலுக்கு பிறகு 3வது சுற்றில், தன்வியின்  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காரணம் குறித்து கேட்டபோது இரு வெறு மதத்தினராக இருப்பதால், இந்து மதத்துக்கு முகமது சித்திக் மாறி பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த தான்வி, "எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை" என பதிலளித்துள்ளார். இதை கேட்ட அதிகாரி அவரை வெளியில் போகுமாறு கடும் வார்த்தைகளால் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து சித்திக்கை அழைத்து பேசிய அதிகாரி , நீங்கள் இந்து  மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது, என அவரையும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், அதில், "ஆதங்கத்துடன் இதை பதிவிடுகிறேன், கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார். 

சம்பவம் நடைபெற்ற சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டி.எம்.முலாய்  இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டார்.  இருவரும் வியாழக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கபட்டது. 

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close