ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது- குமாரசாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jun, 2018 07:46 pm
karnataka-chief-minister-kumarasamy-speaks-about-cauvery-issue


கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

பெங்களூரு ராம்நகரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் குமாரசாமி, “கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. தண்ணீர் திறப்பு தொடர்பாக தொழில்நுட்ப அல்லது சட்ட ரீதியான பிரச்சனை வந்தால் அதை எதிர்க்கொள்ள நான் தயார். கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது, எனவே கே.ஆர்.எஸ் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் என கூறினார். 

தமிழகத்திற்கு எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என தீர்ப்பாயம் கூறியுள்ளதோ, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம் எனக்கூறிய அவர், மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்திற்காக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தற்போது ஆணை பிறக்கப்பிட்டுள்ளது” என கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close