பா.ஜ.கவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - சிவசேனா தாக்கு

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 05:27 pm
history-will-never-forgive-bjp-for-its-greed-in-kashmir-shiv-sena

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை பா.ஜ.க முறித்துக்கொண்டது. இதனால் பெரும்பான்மையை இழந்த மெஹபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. கூட்டணி முறிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிவசேனா கட்சி பிரதமர் மோடியையும், பா.ஜ.கவையும் வார்த்தைகளால் சரமாரியாக தாக்கியுள்ளது. 

கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியான செய்தியில், "காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பேராசையில் பா.ஜ.க, பி.டி.பியுடன் கூட்டணி வைத்தது. தீவிரவாதத்தை ஒழிப்போம் எனக்கூறி கூட்டணி வைத்துவிட்டு, தற்போது முடியாது என்றவுடன் கூட்டணியை கலைத்துள்ளது பா.ஜ.க. முன்னதாக ஆங்கிலேயர்கள் எவ்வாறு வந்து இந்திய வளங்களை சுரண்டினார்களோ அதுபோன்று தான் காஷ்மீரில் நிலைமை உள்ளது. இதற்கு காஷ்மீர் மக்களும், ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். பா.ஜ.கவின் இந்த பேராசையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. 

காஷ்மீரில் இவ்வாறான ஒரு நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.  பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை விளையாட்டைப் போல நடத்திக் கொண்டிருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close