ம.பி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 06:58 am
mp-15-people-from-the-same-family-killed-in-horrific-accident

மத்திய பிரதேசத்தில், ஜீப் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் மொரேனா பகுதியில், உறவினரின் இறுதி சடங்கிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 20 பேர் ஒரு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்கள் 3 பேர் பின்னர் இறந்தனர்.

காயமடைந்துள்ள மற்ற 5 பேரில், 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனராம். இறந்தவர்கள் 15 பேரில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார். போலீசிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வண்டியை ட்ரைவர் வேகமாக ஒட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து வாகன ஓட்டுநர் தப்பித்து விட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close