ஆபாசமும், அழகும் பார்ப்பவர்களை பொறுத்தது: அட்டைப்பட வழக்கில் கேரள நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 08:56 am

kerala-hc-clears-grihalakshmi-magazine-case-sayinig-can-t-see-any-obscenity

மலையாள இதழ் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற அட்டைப்படத்திற்கு எதிரான வழக்கை, ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம்.

கேரளவில் பிரபலமான வார இதழான கிரிஹலட்சுமியின் மார்ச் மாத இதழின் அட்டைப்படம் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியது. அதில் மலையாள எழுத்தாளர் கிலு ஜோசஃப் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்திருந்தார். அற்கு கீழே, ‘உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்த அட்டைப்பட சர்ச்சை தொடர்பாக வார இதழ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான மனுவில், தாய் பாசத்தை  வைத்து மோசமான விளம்பர செயல் என்று வழக்கறிஞர் வினோத் மேத்யூ என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான இதழின் ஆசிரியர், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அட்டைப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை அச்சிட்டிருந்தோம் என்றார். 

முன்னதாக மனைவி தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை, கணவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதனை பலர் கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிரிஹலட்சுமி வார இதழ் செயல்பட்டது.

அட்டைப்படம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த எழுத்தாளர் கிலு ஜோசஃப், தான் செய்தது சரிதான். இதற்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காகவே நான் போஸ் கொடுத்தேன் என்று கூறினார். அவர் அந்த அட்டைப்படத்தில் நடிக்கவே செய்திருந்தார். அந்த குழந்தை அவருடையது அல்ல என்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அந்த அட்டைப்படத்தை ரவிவர்மாவின் ஓவியத்தை பார்த்த அதே கண்களில் தான் பார்த்தோம். அந்த அட்டைப்படத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் வாக்கியத்திலும் எந்த தவறும் இருப்பது போல தெரியவில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களை பொறுத்து. அப்படி தான் ஆபாசமும். அந்த அட்டைப்படத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் வாக்கியத்திலும் எந்த தவறும் இருப்பது போல தெரிவில்லை" எனக்கூறி அந்த வழக்கை ரத்து செய்தது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.