மாம்பழம் பறித்ததால் 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 11:06 am
bihar-boy-shot-dead-for-plucking-mangoes

பீகார் மாநிலத்தில் மாம்பழம் பறித்த 10 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பத்ரஹா கிராமத்தை சேர்ந்தவர் மகுனி யாதவ்(வயது 38). அவரது மகன் சத்யம் குமார்(வயது 10). சத்யம் தனது நண்பனுடன் தனது வீட்டிற்கு அருகே இருந்த தோப்பில் மாம்பழம் பறித்துள்ளான். அப்போது யாரோ அவனை சுட்டுள்ளனர். இதில் சத்யம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

இதுகுறித்து உடன் இருந்த சிறுவன் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தோப்பின் பாதுகாவலர் தான் சுட்டார் என்றும் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close