கர்ப்ப கால யோகா: சானியா மிர்சாவுக்கு மேனகா காந்தி பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 04:22 pm
maneka-gandhi-lauds-sania-mirza-for-practising-prenatal-yoga

சர்வதேச யோகா தினமான நேற்று கர்ப்ப கால யோகாசனம் செய்து அந்தப் படங்களை பகிர்ந்த சானியா மிஸ்ராவுக்கு மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் சர்வதேச யோகா தினமான நேற்று சானியா மிஸ்ரா தான் கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

"சர்வதேச யோகா தினமோ அல்லது வேறு எந்த நாளோ, இந்த யோகாசனம் தான் கர்ப்பகாலத்தில் என்னை உடல்தகுதியுடன் வைத்துள்ளது... நீங்கள் எப்படி?" என்று அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  மேனகா காந்தி, "அருமை சானியா, உடலை தகுதியாக வைத்துக்கொள்ள கர்ப்பகால யோகாசனம் செய்யும் உங்கள் வழி மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ரீ ட்வீட் செய்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close