நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 12:02 pm
justice-chelameshwar-demits-office-today

உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 7 ஆண்டுகள் பணியில் இருந்தவர் செல்லமேஸ்வர். ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மௌவ்யா மண்டல் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2011ம்ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 

இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவரது 65வது பிறந்தநாளான இன்றுடன் அவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஜனநாயகத்தை காப்பதில் செல்லமேஸ்வர் சிறப்பாகப் பணியாற்றியதாக மூத்த  நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அவருக்கு புகழாரம் சூட்டினர். இவர் ஆதார் உட்பட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். 

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து 4 நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர். அந்த 4 பேரில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வரும் அடங்குவார். மேலும் அவருடன் ராஜன் கோகாய், எம்.பி. லோகர், குரியன் ஜோசஃப் அகியோர் இருந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்கட்சிகளும் தீபக் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close