காஷ்மீர்: ஐ.எஸ் தலைவன் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

  Newstm News Desk   | Last Modified : 23 Jun, 2018 06:03 am

4-is-militants-killed-in-kashmir

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 30 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினருடன் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவராக கருதப்படும் ஸகீர் மூஸா உட்பட, அந்த அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் இறந்ததாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, ஐஎஸ் அமைப்பின் இணையதளத்தில், அதன் கிளை அமைப்பான அன்வர் கஸ்வதுல் ஹிந்த்தின் தலைவராக ஸகீர் மூஸா குறிப்பிடப்பட்டிருந்தார்.  

 அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம் என்ற பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒருவரும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரியும் கொல்லப்பட்டனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close