தமிழக எழுத்தாளர்களுக்கு யுவ, பால சாகித்ய புரஷ்கார் விருதுகள்!!

  சுஜாதா   | Last Modified : 23 Jun, 2018 08:38 am

sahithya-academy-award

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஷ்கார் விருதும், கிருங்கை சேதுபதி உள்பட 21 எழுத்தாளர்களுக்குப் பால சாகித்ய புரஸ்கார் விருதையும் டெல்லி சாகித்ய அகாடமி  விருது பட்டியல் வெளியிட்டது.

இந்தியாவில்  ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், சாகித்ய அகாடமி மாநில, இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஷ்கார்), சிறார்களுக்காக எழுதப்படும் சீரிய படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஷ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி,  23 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய விருதுகளும் 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த 2 பிரிவிலும் தமிழக எழுத்தாளர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன் படி ‘அம்பு படுக்கை’ என்ற சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஷ்கார் விருதும், ‘சிறகு முளைத்த யானை’ என்ற கவிதை நூலை எழுதிய கிருங்கை சேதுபதிக்கு பால சாகித்ய புரஷ்கார் விருதும்  வழங்கப்படுகிறது. 

இந்த விருது தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது. பால புரஸ்கார் விருதுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கும்தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்ற தமழக எழுத்தாளர்களுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close