அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம்?

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 12:42 pm
j-k-put-on-terror-alert-ahead-of-amarnath-yatra

அமர்நாத் புனித யாத்திரையை செல்லும் வழியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வருகிற ஜூன் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக செல்ல இருக்கின்றனர். 

இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப்படை தகவல் வெளியிட்டுள்ளது.  நேற்று காஷ்மீரில் பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் உட்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் தங்கியிருந்ததாக  காவல்துறைக்கு தகவல் வந்தது. அங்கு சென்று ஆய்வு செய்ததில், தீவிரவாதிகள் வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. போலீசாரின் வருகை தெரிந்து அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close