ஜிஹாதிகளுக்கு ராகுல் காந்தி ஆதரவா?: சிதம்பரம் காட்டம்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 07:59 am
jaitley-s-claims-that-congress-support-jihadis-and-maoists-are-laughable

ஜிஹாதிகளுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பதாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் வேடிக்கையானவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் எழுதிய ஒரு இணையதள தொகுப்பில், நாட்டில் இடதுசாரி தலைவர்களிடம் இருந்து, ஜிஹாதிகளுக்கும், மாவோயிஸ்ட்டுகளும் ஆதரவு கிளம்பி வருவதாக குற்றம் சாட்டினார். பொதுவாகவே இதுபோன்ற கூட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததாக அதில் கூறியுள்ள ஜெட்லி, ராகுல் காந்தி அவர்களை எதிர்த்து  எதுவும் கூற மறுப்பதாக தெரிவித்துள்ளார். 

"ஜெ.என்.யு பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத்திலும் மோசமான கோஷங்களை எழுப்பிய கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ராகுல் தயங்கவில்லை. இதன் காரணமாக மூன்றாவது அணியாக தங்களை அடையளாப் படுத்திக் கொள்ளும் சில கட்சிகளும் இந்த அமைப்புகளின் செயல்களை கண்டிக்க மறுகின்றனர். இந்த அமைப்புகளை பயன்படுத்தி ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இதை வைத்து அரசியல் செய்ய மட்டுமே முயற்சிக்கின்றனர்" என்றார் ஜெட்லி.

இதற்கு பதிலளித்து பேசிய சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, காஷ்மீரில் ஜிஹாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்ததாக கூறியுள்ளார். "ஜிஹாதிகளுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் ராகுல் காந்தி ஆதரவளிப்பதாக கூறுவது வேடிக்கையான ஒன்று. காங்கிரஸ் அவர்களுக்கு எதிரான கட்சி தான்" என்றார் சிதம்பரம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close