இனி ஏசி-களில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 இல்லை, 24 டிகிரி தான்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jun, 2018 08:47 am

govt-likely-to-fix-default-ac-setting-at-24-degree-celsius

ஏசி எனப்படும் குளிரூட்டும் சாதனங்களில் 24 டிகிரி செல்சியசிற்கு கீழ் வெப்பநிலையை குறைக்க முடியாது என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. 

சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமில்லாமல் கிராமங்களில் கூட ஏசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், ஏசி, பயன்படுத்தும் அறைக்கு குளிர்ச்சியை கொடுத்தாலும் நகரத்தின் வெப்பநிலையை மேலும் உயர்த்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. இதனால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏசி பயன்பாட்டை தடை செய்ய முடியாது. ஆனால் கட்டுபடுத்த முடியும்; மத்திய அரசின் முயற்சியால் சுற்றுசூழலை பாதுகாப்பதுடன் மின்சாரத்தையும் சேமிக்க முடியும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

தற்போது ஏசியில் குறைந்த பட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இனி புதிதாக தயாரிக்கப்படும் ஏசி மெசின்களில் 24 டிகிரி செல்சியஸ் தான் குறைந்தபட்சம் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏசியில் 1 டிகிரி குறைத்தால் 6% மின்சாரம் சேமிக்கலாம் என்றும் இந்த திட்டம் வெப்பம் மிகுந்த நகரங்களுக்கு கைக்கொடுக்காது என்றும் மின்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சென்னை போன்ற வெப்பம் அதிகமுள்ள நகர மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close