பீகாரில் ரூ.8,000த்துக்கு எடைக்கு வீசப்பட்ட 10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள்!

  Padmapriya   | Last Modified : 24 Jun, 2018 02:10 pm

bihar-s-42-000-missing-class-10-answer-sheets-were-sold-as-scrap-for-8-500

பீகாரில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை ரூ. 8,500க்கு விற்பனை செய்த அவலம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநில பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில், பங்கு பெற்ற மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது. வரும் ஜூன் 26-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  திடீரென சுமார் 42 ஆயிரம் விடைத்தாள்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. 

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளதேர்வு மையத்துக்கு கல்வி அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தபோது 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் மாயமானது தெரியவந்தது. உடன் போலீசில் புகார் கூறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.  

இந்த நிலையில், கடந்த வாரம் இரவு பள்ளியின் பணியாளர் உதவியுடன் வேனில் கட்டுகட்டுட்டாக வேஸ்ட் பேப்பர் கட்டுகளுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்களும் கொண்டு செல்லப்பட்டதும். அவை ரூ. 8 ஆயிரத்து 500-க்கு எடைக்கு போட்டப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து பள்ளி முதல்வர், பியூன் உள்பட 3 பேர் மீது கோபால்கன்ஞ் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close