• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 03:55 pm

bjp-minister-gets-2-frogs-married-to-make-it-rain

மத்திய பிரதேசத்தில் மழை பெறுவதற்காக பா.ஜ.க அமைச்சர் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் லலிதா யாதவ். இவர் சத்தர்பூர் பகுதியில் உள்ள கோயிலில் 2 தவளைகளுக்கு திருமண செய்து வைத்துள்ளார். மழை வருவதற்காக இது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை பார்க்க 100க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். தவளைகள் திருமணத்திற்கு பிறகு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அக்கோயிலின் பூசாரி ஆச்சார்யா பிரிஞ்நந்தன் கூறும்போது, "இது போன்ற நிகழ்வுகள் பழமையான சடங்கு. இதனால் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும” என்றார். மேலும் இதுப்பற்றி பேசிய அமைச்சர் லலிதா, “இயற்க்கையை சமன் படுத்த இது போன்ற சடங்குகள் செய்ய வேண்டும்” என கூறியிருக்கிறார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதே போல, உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மழை பொழிய வேண்டும் என்பதற்காக இரண்டு பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. வாரணாசி பகுதியில் உள்ள சிலர், இந்த வித்தியாசமான திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மந்திரங்களுடன் திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும், இந்த வினோதமான திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை, மணப்பெண் போல ஆடை அணிந்த இருவரும் பங்குகொண்டனர்.

Advertisement:
[X] Close