டிரம்ப்பை கடவுளாக வணங்கும் இந்தியர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jun, 2018 12:17 am

meet-telangana-s-donald-trump-worshipper

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கடவுள் போல் கருதி வழிபட்டு வருகிறார்.

தெலங்கானா மாநிலம் கொன்னே என்ற கிராமத்தை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா என்ற அந்த வாலிபர் கடந்த ஓராண்டாகவே டிரம்ப்பின் அதிதீவிர ரசிகராக இருந்து வருகிறார். டிரம்பின் படத்திற்கு பொட்டு வைப்பது, பூக்கள் வைத்து அலங்கரிப்பது, விளக்கேற்றுவது என இவரது செயல்கள் தீவிரமடைந்து ஒரு கட்டத்தில் தனது ரத்தத்தால் டிரம்ப் படத்திற்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார்

இதுகுறித்து புஸ்ஸா கிருஷ்ணா கூறுகையில், டிரம்ப்பின் அதிரடியான கொள்கைகளால் கவரப்பட்டதாகவும் எனவே அவரை கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்ப்பை புகழ்ந்து ஃபேஸ்புக்கில் கிருஷ்ணா எழுதி வருவதை கண்ட அமெரிக்கர்கள் பலர் அவரை வாழ்த்தியுள்ளனர்.


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close