பேயலாம் இல்ல... கொசுதான்! - சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jun, 2018 12:45 am
tdp-mla-sleeps-in-crematorium-to-drive-away-fear-of-spirits-among-workers

ஆந்திராவில் சுடுகாட்டில் தொழிலாளர்கள் கட்டிட பணிகள் மேற்கொள்ள அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் கட்டில்போட்டு தூங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினரான நிம்மல ராம நாயுடு, சுடுகாட்டில் தொழிலாளர்கள் கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுடுகாட்டில் கட்டில்போட்டு தூங்கியுள்ளார். பாலகோல் பகுதியில் உள்ள சுடுகாட்டை யாரும் பயன்படுத்தாமல் இருந்தது. எனவே அதனை புனரமைக்க அம்மாநில அரசு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கியது.

ஆனால் அந்த சுடுகாட்டில் பேய், பிசாசு உலாவுகிறது என்ற வதந்தியால் சுடுகாட்டை புனரமைக்க யாரும் டெண்டர் அமைக்க யாரும் முன்வரவில்லை. ஒருவழியாக நீண்ட நாட்களாக ஒப்பந்ததாரரிடம் பேசி டெண்டர் அமைக்கப்பட்டது. பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியால் தொழிலாளர்கள் கட்டிட பணிக்கு வரவில்லை.

பேய், பிசாசுலாம் இல்லை என்பதை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்த நேற்று சுடுகாட்டிலே சாப்பிட்டு அங்கேயே ஒரு கட்டிலை போட்டு உறங்கினார். இதை அறிந்த தொழிலாளர்கள் பேய், பிசாசு இல்லை என்பதை நம்பி அடுத்த நாள் காலை வேலைக்கு வந்தனர்.

இதுகுறித்து கூறிய நிம்மல ராம நாயுடு, தொழிலாளர்களிடம் பேய், பிசாசு பயத்தை போக்கவே சுடுகாட்டில் தூங்கினேன். இனி பயமில்லாமல் தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த சுடுகாட்டில் பேய்லாம் ஒன்றும் இல்லை, கொசுதான் உள்ளது என நகைச்சுவையாக கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close