தொடரும் அநீதி: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jun, 2018 12:11 pm

toilet-cleaned-by-student-in-himachal

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பள்ளி கழிப்பறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்‌தியுள்ளது.

பள்ளி கழிப்பறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம் யுனா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. துப்புரவு ஊழியர்களை நியமிக்காமல் கல்வி கற்க வந்த மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்று மாணவர்களை கட்டாயப்படுத்தி, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்ததால் போராட்டம் நடந்தது. துப்புரவு பணியாளர் இருந்தும் பணிகளை சரிவர செய்வதில்லை என்ற புகாரையடுத்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவு வழங்கப்பட்டது. இட மாறுதல் மட்டும் தீர்வு இல்லை, இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மீது வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close