பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jun, 2018 02:37 pm
s-suhas-district-collector-of-alappuzha-kerala-shares-mid-day-meal-with-children-of-government-school

கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுடம் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவருந்திய புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் ஆலப்புழையில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசு பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவின் தரத்தை அம்மாவட்ட ஆட்சியர் சுகாஸ் நேரில் வந்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார். மேலும் உணவின் ஊட்டச்சத்தினை அறிய அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார்.    அவருடன் முன்னாள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி லலிதாவும் அரசு பள்ளியில் வழங்கப்படும் உணவை அருந்தினார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படத்தை பதிவிட்டு, உணவின் சுவை நன்றாக இருந்ததாகவும், மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வருவல் ஆகியவை மிகவும் சுவையாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று உணவை உண்டு ஆய்வு செய்தது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close