ஓய்வுப்பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர்க்கு பார் கவுன்சில் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 11:35 am

bci-condemns-former-sc-judge-for-statements-made-during-post-retirement-interview

ஊடங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர்க்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் செல்லமேஸ்வர். இவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் பணியற்றுவதை தவிர்த்து நீதிபதி சஞ்சய் கவுல் அமர்வில் பணியாற்றி வந்தார். இவர் நீதிபதியாக இருந்த போது பல சர்ச்சைக்குரிய வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பளித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர். மேலும், இந்திய வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியில் இருக்கும் போதே, செய்தயாளர்களைச சந்தித்து, நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த 22ம் தேதி அவர் பணி நிறைவு பெற்றார். 

இவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் ஓய்வு பெற்ற பின் ஊடகங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பார் கவுன்சலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா சார்பில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை சந்தித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close