ஜூலை 2ல் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்?

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 07:18 pm
first-meeting-of-the-cauvery-water-management-authority-likely-to-be-held-on-july-2-in-new-delhi

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் ஜூலை 2ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக்குழு பெங்களூருவை தலைமையிடமாகவும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்பிலும் 9 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த குழுவில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்தும் தலா ஒருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அவர்களை அந்தந்த மாநில அரசுகளே தேர்தெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பு கூறியிருந்தது. அதன்படி, அமைப்பிற்கான உறுப்பினர்களை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகள் அறிவித்துவிட்டன. ஆனால் கர்நாடகா அரசு உறுப்பினர் பட்டியலை அறிவிக்காமல் இருந்து வந்ததையடுத்து மத்திய அரசே கர்நாடக மாநிலத்திற்கான உறுப்பினர்களை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் அடுத்த வாரம் புதுடெல்லியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 2ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தை தொடர்ந்து பெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கான கூட்டம் நடைபெறும் எனதகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close