பாபா ராம்தேவ்க்கு லண்டனில் மெழுகு சிலை

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 10:00 am

baba-ramdev-to-have-wax-statue-at-madame-tussauds

லண்டனில் புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாபா ராம்தேவ்க்கு மெழுகு சிலை அமைய உள்ளது. 

ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைத்து கொரவிக்கப்படும். இதில் சச்சின், அமிதாப் பச்சான் உள்ளிட்ட பல இந்தியர்களுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த அருங்காட்சியகத்தை பார்க்க பாபா ராம் தேவ் நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் சிலையின் அருகே நின்று அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்நிலையில், ராம்தேவின் சிலையையும் அங்கு வைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக அருங்காட்சியகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பெரும்பாலும் கொடுக்கும் விருக்‌ஷானா ஆசன போஸ் கொடுத்தார். சிலைக்கான அளவுகளை பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். இந்த புகைபடங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close