இந்தியாவில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலை: யஷ்வந்த் சின்ஹா

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 10:36 am

undeclared-emergency-more-dangerous-than-indira-s-yashwant-sinha

இந்தியாவில் தற்போது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலை இருப்பதாகவும், இது இந்திரா கொண்டு வந்த நெருக்கடியை விட ஆபத்தானது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.

இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர். அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.58 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் இயக்குனராக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.  நீதித்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்" என்றார். 

Advertisement:
[X] Close