ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்க கூடாது: பாபா ராம்தேவ்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 10:43 am

baba-ramdev-backs-sterlite-after-meeting-vedanta-chief

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்க  கூடாது என்று வேதாந்தா குழும தலைவரை சந்தித்த பின் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று லண்டன் சென்றிருந்தார். அங்கு வேதாந்தா குழுமத் தலைவரான அனில் அகர்வாலை சந்தித்தார். அதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் அகர்வாலுடன் எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட்டார். அந்த பதிவில், " தேசிய கட்டுமைப்பிற்கான செயல்பாட்டில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ஏற்றத்திற்கு உதவிய இவர்களின் பங்களிப்பிற்கு வணக்கம் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தூத்துக்குடியில் உள்ள அப்பாவி மக்களை தூண்டி விட்டு, சர்வதேச சதிகாரர்கள் ஆபத்தை விளைவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கான கோவில்கள். எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றது. 100வது நாள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்தும் மக்களின் வேண்டுகோளை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டு சீல் வைத்தது தமிழக அரசு. இந்நிலையில் பாபா ராம்தேவ் கருத்துக்கு  அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close