இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது: ஐ.நாவில் இந்தியா திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 04:20 pm

pakistan-told-jammu-and-kashmir-an

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், வெறும் கோஷங்களால் காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்றும் ஐ.நா சபையில் இந்தியத்தூதர் சந்தீப்குமார் பேசியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஐ.நா அமைப்பு சமீபத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் தூதர் ஐ.நாவில் இந்தியாவை தாக்கி பேசினார். இதற்கு இந்தியத்தூதர் சந்தீப்குமார் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அவர், ஐ.நா. சபையில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. பாகிஸ்தானின் வெறும் கோஷங்களால் இதனை மாற்றி விட முடியாது. பாகிஸ்தான் தூதர் தேவையற்ற கருத்துக்களை பேசியுள்ளார். ஐ.நாவில் இதுகுறித்த பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்.அதில் இந்தியா பங்கேற்று விளக்கமளிக்க தயாராக உள்ளது காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைக்கும் பாகிஸ்தானின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close