இந்திய அரசியல்வாதிகளால் போஸ்டர் பாய் ஆக்கப்பட்டேன்: விஜய் மல்லையா 

  Padmapriya   | Last Modified : 26 Jun, 2018 08:20 pm
vijay-mallya-releases-letter-to-pm

வாங்கிய கடன்களை திருப்பி அளிக்க முயற்சி செய்து வருவதாகவும், அரசியல் காரணங்களுக்கான நெருக்கடியை குறிப்பிட்டும் தான் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை தற்போது விஜய் மல்லையா வெளியிட்டுள்ளார். 

இந்திய வங்கிகளிடம் நதி மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா 2016ம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். 

இது குறித்து லண்டனில் பேசிய மல்லையா, "2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஆகிய இருவருக்கும், எனது பிரச்னை குறித்து கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. பொதுத் துறை வங்கிகளுடன் எனக்கு நிலவி வரும் பிரச்னையை சரி செய்ய அனைத்து விதத்திலும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால், அரசியல் காரணங்களுக்காக நான் பயன்படுத்தப்பட்டால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் இந்திய அரசியல்வாதிகளால் தான் வங்கி மோசடியின் போஸ்டர் பாய் ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டார். அவர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்து, கைது செய்ய இருந்தபோது இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று அடைக்கலம் பெற்றார். தொடர்ந்து அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசும் சிபிஐ அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். இது தொடர்பாக அவர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இங்கிலாந்து அரசால் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு பின், அதே நாளில் பிணையில் வெளி வந்தது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close