அமர்நாத் யாத்திரிகள் எங்கள் விருந்தாளிகள்: ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 06:24 am
amarnath-pilgrims-are-our-guests-hisbul-mujahideen

ஜம்மு காஷ்மீரில், அமர்நாத் யாத்திரை செல்ல வரும் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

 ஜம்மு காஷ்மீர் டிஜிபி சமீபத்தில் பேட்டியளித்த போது, தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்த  திட்டமிட்டு இருப்பதாகவும், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களை குறிவைத்து தாக்கலாம் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், காவல்துறை கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல் அமைப்பின் ரியாஸ் நக்கூ அந்த வீடியோவில் பேசியபோது, "அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் எங்கள் குறி கிடையாது. அவர்கள் புனித பயணமாக இங்கு வருகிறார்கள். எங்களின் விருந்தாளிகள்" என்று கூறினார்.

மேலும், "அமர்நாத் யாத்திரிகளை நாங்கள் என்றுமே தாக்கியது கிடையாது. ஆயுதம் ஏந்துபவர்களை மட்டுமே எதிர்ப்போம். எங்கள் போர் இந்தியாவுடன் தான். இந்திய மக்களுடன் கிடையாது" என்றும் கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close