இருக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்!!

  சுஜாதா   | Last Modified : 27 Jun, 2018 06:05 am

now-apply-for-passport-from-anywhere-in-india

நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட் பெற, 'பாஸ்போர்ட் சேவா ஆப்'  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் கிடைப்பது என்பது பெரும் பிரச்சனையான ஒன்று. இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தாலும், அவ்வளவு எளிதாக பாஸ்போர்ட்டுகள் கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளதால் மற்ற பகுதி மக்கள் அந்த நகரங்களுக்கு சென்று வர வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. இக்குறையை நீக்கி அவரவர் இருந்த இடத்திலேயே பாஸ்போர்ட் பெற மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ (Passport Seva app) என ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்க முடியும்.  

இது குறித்து சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: "நாடுமுழுவதும் மக்களவை தொகுதிக்கு ஒன்று வீதம், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும். இனி நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆப்பில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு வந்து, போலீஸார் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதன் பிறகு, பாஸ்போர்ட் வழங்கப்படும். இது ஒரு பாஸ்போர்ட் புரட்சி" என்றார். 
மேலும், பாஸ்போர்ட் பெற திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை. திருமணம் ஆன தகவலை மட்டும் தெரிவித்தால் போதும். அதே போல், விவாகரத்து ஆன பெண்கள், முன்னாள் திருமண விவரங்களை அளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.