அமைச்சர்கள் கூட நெருங்க முடியாது: பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 08:53 am
new-security-guidelines-for-prime-minister-modi

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அவரது பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பான மிரட்டல் கடிதம்  டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி புனே போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 

இது தவிர சமீபத்தில் மேற்குவங்கம் சென்றிருந்த பிரதமர் மோடியை 6 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்மநபர் ஒருவர் அருகே சென்றது பாதுகாப்பு  அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமரின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா ராஜிவ் ஆகியோருடன் ஆய்வு நடத்தினார். அப்போது பிரதமரின்  பாதுகாப்பை அதிகரிக்க சம்மந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து பிரதமர் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது, "அடுத்தாண்டு நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர்  மோடியின் உயிரை குறிவைத்து அதிகளவு மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் அனுமதியின்றி மத்திய,  மாநில அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ கூட பிரதமரை நெருங்க முடியாது. பிரதமருக்கு வந்துள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வரும் மக்களவை தேர்தலில் பாஜவின் முக்கிய பிரசார தலைவரான பிரதமர் மோடியை பேரணிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என முடிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகமுள்ள சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா மேற்குவங்காளம் ஆகிய  மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தலைவர்கள் பிரதமரின் வருகையின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  இதேபோல் பிரதமரின் கேரளா வருகையின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close