காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை இன்று துவங்கியது!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 04:19 pm

jammu-first-batch-of-amarnath-yatra-flagged-off

காஷ்மீர் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க யாத்ரீகர்கள் இன்று தங்கள் பயணத்தை துவங்கியுள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனி லிங்க தரிசனம் ஜூன் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக செல்ல இருக்கின்றனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக 2.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான யாத்திரை மேற்கொள்வதற்காக 1.96 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அமர்நாத் யாத்ரீகர்களை ஹிஸ்புல் தீவிரவாதிகள் தாக்கலாம் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு இதனை மறுத்துள்ளது. அமர்நாத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் எங்களது விருந்தாளிகள். ஆயுதம் ஏந்தியவரை தான் நாங்கள் எதிர்ப்போம். இந்தியா தான் எங்கள் எதிரி. இந்திய மக்கள் அல்ல" என ஹிஸ்புல் தீவிரவா அமைப்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. இருந்தாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சுமார் 40 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறும் அவர்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கான முதல் குழு பயணம் இன்று துவங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தமுறை பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close