சமூக நலத்திட்ட பயனாளிகள் 50 கோடியாக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 04:27 pm

social-security-cover-extended-to-50-crore-people-pm-narendra-modi

நாட்டில் சமூக நல பாதுகாப்புத் திட்டங்களால் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து அதன் பயனாளர்களிடம் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசினார். அதில் பேசிய அவர், "கடந்த 2014ம் ஆண்டு சமூக நல திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கை 5 கோடியாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி, இது 50 கோடியாக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டில் இருந் து கணக்கிடுகையில் இது 10 மடங்கு அதிகமாகும். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்தும் வகையில் தான் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. 

புதிய தொழில் தொடங்கும் பொருட்டு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களும் அதிகளவில் இதில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. 

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 28 கோடி புதிய வங்கிக்கணக்குகள் தொடரப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களில் கடன் பெறாதவர்கள் கடன் பெறவும், நிதிநிலையில் பின்தங்கிய மக்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close